Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

அப்பா வயது நடிகருடன் அல்லோல்படும் பூர்ணா!

Cine Gossips
பதினாறு வயதை தொட்டதுமே சினிமா கோதாவில் இறங்கிவிட்டார் பூர்ணா. கேரளத்து பெண்குட்டியான இவர் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகை. ஆனால் நடித்த படங்கள் வரிசையாக ஊத்திக்கொண்டதால், கோடம்பாக்கம் அம்மணியை ஏறக்கட்டி விட்டது. அதனால் பிழைப்பு தேடி ஆந்திராவில் ஒதுங்கிய நடிகைக்கு அங்கு நல்ல ஏறுமுகமாகவே மார்க்கெட் இருந்தது. அதோடு, தமிழில் போர்த்திக்கொண்டு நடித்த பூர்ணா, அங்கு சென்றதும் போர்த்தியிருநத போர்வையை காற்றில் பறக்க விட்டதால் படக்கூலியும் எகிறியது.

இந்த சமயத்தில் களவாணி நாயகன் நடிக்கிற ஒரு படத்துக்காக தமிழுக்கு வந்திருக்கிறார் நடிகை. ஆனால் இதே படத்தில் தான் கடைசியாக தமிழில் கதாநாயகியாக நடித்து விட்டு சென்ற ஒரு ஐந்தெழுத்து படத்தின் நாயகனும் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துளளார் பூர்ணா. காரணம், அந்த படத்தில் நடித்தபோது அந்த அப்பா வயது நடிகர், அடிக்கடி நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடந்தால் நடிகை மக்கர் பண்ணுவார் என்பதற்காக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி மேற்படி நடிகை மீது வில்லன் தோரணையில் சீறி பாய்ந்திருக்கிறார் அந்த நடிகர். இதனால் அப்போதிலிருந்தே அந்த நடிகரின் பெயரைக்கேட்டாலே நடிகைக்கு அலர்ஜியாம். அதனால் இப்போது நடிக்கிற படத்திலும் அவர் இருப்பதால் அவரிடமிருந்து தன்னை காத்துக்கொள்வதற்காக தனது தாய்குலத்தை எப்போதும் நிழல் போலவே தன்னை தொடர்ந்து வருமாறு உத்தரவு போட்டிருக்கிறார். இப்படி நடிகையை தாய்குலம் நிழல்போல் தொடர்வதால் நடிகையை அண்ட முடியாமல் ஆத்திரத்தில் கழுகு போன்று வட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் அந்த புதுமையான நடிகர்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

JAIRAJ - bangaluru,இந்தியா
2013-01-17 16:41:45 Report Abuse
 JAIRAJ ஓடாதே கண்ணு. நின்னு நிதானமாக பேசு. இஷ்டமில்லை என்று சொல்லு. கேட்கவில்லை என்றால், சம்மதமுள்ள வயதான பெண்மணியை அவன் உன்னை படுத்துவதுபோல் அவனை படுத்தச்சொல்லு. அதற்க்கும் அடங்கவில்லை என்றால், கூப்பிட்டு கொஞ்சுவதுபோல் நடித்து அறுத்து விடு. அதற்குமுன் உன் மனசாட்சியிடம் உன்னைப்பற்றி தெளிவாக பேசிக்கொள். சரிதானே. சும்மா ஓலை விடாதே !
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
selvarajan - Paris,பிரான்ஸ்
2012-12-06 18:53:11 Report Abuse
 selvarajan சினிமாவில் இதெல்லாம் சகஜம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சக்தி - chennai,இந்தியா
2012-12-04 15:22:36 Report Abuse
 சக்தி யாரு பார்திபனா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MK - chennai ,இந்தியா
2012-12-04 15:18:17 Report Abuse
 MK FILM: VITHAKAN ACTOR: PARTHIBAN.R
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in