'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா இயக்குனர்களின் முக்கிய மூளையாக இருப்பவர்கள் அவர்களின் உதவியாளர்கள். அந்த வகையில் எந்தவொரு இயக்குனருமே தங்களிடமுள்ள திறமையான உதவி இயக்குனர்கள் வெளியேறுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி அவர்கள் தங்களை விட்டு செல்லாமல் இருக்க அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பண உதவிகளை அவ்வப்போது செய்து கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். அப்படித்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் நல்ல உதவி இயக்குனர்கள் வெளியேறுவதை விரும்ப மாட்டார்.
ஆனால் நண்பன் வரை அவரிடம் நிலையாக இருந்த சில அசோசியேட் இயக்குனர்கள் இப்போது, தாங்களும் தனியாக படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் அவரிடமிருந்து வெளியேறி விட்டார்களாம். இன்னும அதிகமான உதவி செய்யக்கூட தயாராக இருக்கிறேன் என்று இயககுனர் தடுத்தும் அவர்கள் அதற்கு உடன்படவில்லையாம். இதனால் தற்போது இயக்கி வரும் ஐ படத்தில் சில புதிய உதவி இயக்குனர்களை தனது கூட்டணியில் சேர்த்திருக்கும் ஷங்கர், அவர்களுக்கும், தனக்குமிடையே உள்ள புரிதல் சரியாக இல்லாததால் ஸ்பாட்டில் தடுமாறிப்போகிறாராம். இந்த நிலையை தவிர்க்க, ஏற்கனவே தன்னிடம் ஒர்க் பண்ணிவிட்டு தனியாக படம் பண்ணியுள்ள சில முன்னாள் உதவியாளர்களுக்கு தற்போது அழைப்பு விடுத்திருக்கிறார் பிரம்மாண்டம்.