தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காலத்தின் மாற்றம் குடும்ப குத்து விளக்கான அஞ்சலியையும் குத்து நடிகையாக்கி விட்டது கோடம்பாக்கம். அது மட்டுமின்றி, நடிகர்களுடன் நெருக்கமாக உரசி நடிக்க சொன்னாலே ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டு ஓவென்று அழக்கூடியவர். ஆனால் இப்போது கையில் கிடைக்கும் ஹீரோக்களை துவம்சம் செய்யாத குறையாய் பின்னி பெடலெடுத்து விடுகிறார். இதனால் சும்மானாட்டும் சீன் காட்டும் நடிகைகளுடன் நடிப்பதை விட அஞ்சலியுடன் நடித்தாலாவது கட்டிப்புரண்டு சூடு காட்டுவார் என்று இளவட்ட ஹீரோக்கள் அவர் பின்னால் சுற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதில் சில முன்னணி ஹீரோக்கள் அஞ்சலிக்கு நேரடியாக சிபாரிசு செய்கின்றனர். ஆனால் அப்படி தனக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹீரோக்கள் யார் யார் என்கிற விவரத்தை சேகரித்து வைத்துக்கொள்ளும் அஞ்சலி, எங்காவது அவர்களை சந்திக்க நேர்ந்தால், கண் சிமிட்டி ஓரக்கண்ணால் துளைத்து எடுக்கிறாராம். மேலும் தன்னை அவர்கள் மறக்காமல் இருக்க, தூரத்தில் நின்றபடியே பறக்கும் முத்தங்களை ஏவுகணைகளாக அவர்கள் மீது பாய்ச்சுகிறாராம். இதில் சில மேல்தட்டு ஹீரோக்கள் செயலிழந்து கிடப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.