Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ரஜினி பிறந்த நாள்: கடுப்பில் ஹீரோக்கள்!

28 நவ, 2012 - 11:47 IST
எழுத்தின் அளவு:

இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் வருகிற 12.12.12 அன்று வருவதாலும், இதன் கூட்டுத் தொகை 9 என்பதாலும், ரஜினி மருத்துவ சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்திருப்பதாலும் இந்த பிறந்நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ரஜினியின் பாடல்களை கொண்ட இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ரஜினி இசை ஆல்பம் வெளியிடுகிறார். ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டராக அலெக்ஸ் பாண்டியன் பெயரைக் கொண்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழா அன்று நடக்கிறது. ரஜினி ரசிகர் ஒருவர் தயாரித்துள்ள பயபுள்ள என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் ரஜினி பிறந்த நாள் அன்று நடக்கிறது. இந்தப் படத்தின் பாடல் சிடியோடு ரஜினியின் புகழ்பாடும் பாடல் சிடி ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூன்று நாட்களுக்கு ரஜினியின் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கிறது. இப்படி ரஜினியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இது மற்ற ஹீரோக்கள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பத்திரிகையிலிருந்து சிலர் ஒரு பெரிய நடிகரை சந்தித்து ரஜினிக்கு பிறந்த நாள் மலர் போடுகிறோம். கட்டுரை எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். கடுப்பான அந்த உயரமான ஹீரோ "ஏன் நாங்கள்லாம் பொறக்கலையா... அவர் மட்டுந்தான் பொறந்துருக்காரா... கமல் பிறந்த நாள் வந்துச்சே அதுக்கு மலர் போடலையா" என்று வந்தவர்களை காய்ச்சி எடுத்துட்டாராம். இதே மனநிலையில்தான் எல்லோ ஹீரோக்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

JAIRAJ - THIRUNELVELI,இந்தியா
17 ஜன, 2013 - 16:46 Report Abuse
 JAIRAJ எல்லோரும் நடிகர்களே. இதில் உயர்வு தாழ்வு ஏன் ? ஜால்ராக்கள் அடங்கட்டும்
Rate this:
அணு - chennai,இந்தியா
07 ஜன, 2013 - 18:20 Report Abuse
 அணு ரஜினி ஒன்னும் திருடி சம்பாதிகல உழைச்சு தன சம்பதிக்றாரு ஒழுங்கா வருமான வரி கட்டுற ஒரு ஒழுங்கான இந்தியன் , இதுல அவர விமர்சிக்ற எத்தன பேர் ஒழுங்கா வருமான வரி கட்டுரிங்க முதல்ல நீங்க ஒழுங்கா நடந்துகோங்க அதுக்கப்பறோம் விமர்சிக்கலாம்
Rate this:
krish - colombo,இலங்கை
07 ஜன, 2013 - 18:13 Report Abuse
 krish ரஜினிய விமர்சனம் பண்ற அளவு இங்க ஒருத்தனுக்கும் தகுதி இல்ல ஒரு வேல அவர் அரசியலுக்கு வந்தால் நீங்க விரும்பினா vote பண்ணுங்க இல்லாவிடில் நீங்க விரும்பின தலைவனுக்கு vote பண்ணுங்க அவ்ளோதான் ஆனா ஒன்னு நீங்க தெரிவு செய்ற தலைவர விட ரஜினி ஒரு படியாவது மேல நல்லது செய்வாரு
Rate this:
karthik - chennai,இந்தியா
02 ஜன, 2013 - 18:12 Report Abuse
 karthik hellllllllo,Govindhu,karikalan says exactly,please try to understand
Rate this:
13 டிச, 2012 - 08:30 Report Abuse
சொல்லின் செல்வன் டேய் நாதாரி கோவிந்து தப்பு தப்பா டைப் பண்ணி தமிழ் மொழியை கேவலப்படுத்தாதடா கப்ளிந் தலையா
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in