Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ் | நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் போர் பற்றிய படம் | நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல் | என்னை நிராகரித்த ஹீரோயின்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம் | ரஜினிகாந்த் ஸ்டைலில் ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக் வெளியீடு | தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி டிரான்ஸ்பர் | குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பாதுகாப்பு ஆணையர் தகவல் | ராம்கோபால் வர்மாவின் தொடர் தாக்குதலுக்கு பதில் சொல்ல விரும்பாத துல்கர்..! | க்யா கூல் ஹைய் ஹம் 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சஞ்சய் தத் பெயரில் விளையாட்டு கோப்பை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இப்ராஹிம் ராவுத்தர்!

24 நவ,2012 - 10:49 IST
எழுத்தின் அளவு:

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். ஒரு காலத்தில் ராவுத்தர் பிலிம்ஸ் மூலம் பல பிரமாண்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர். விஜயகாந்த் என்ற நட்சத்திரம் உருவாவதற்கு ராவுத்தர் ஒரு காரணம். ராவுத்தர் என்ற பெரிய தயாரிப்பாளர் உருவாவதற்கு விஜயகாந்த் காரணம். இப்படி நகமும், சதையுமாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தார்கள். அதன் பிறகு தனியாக படம் எடுத்த ராவுத்தர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். ஓட்டல் தொழிலில் இறங்கி அதிலும் பெரும் நஷ்டம். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க புலன் "விசாரணை" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். இதில் பிரசாந்த் ஹீரோ. சுமார் 5 கோடிக்கு மேல் செலவு செய்த எடுக்கப்பட்ட படம். இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் இன்னும் நெருக்கடிக்கு ஆளானார் ராவுத்தர். தியேட்டரில் வெளியிட முடியாத படத்தை சேனலுக்காவது விற்று அதில் வரும் தொகையை கொண்டு ஒரு கடனை அடைக்கலாம் என்று சேனல் சேனலாக அலைந்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் ராவுத்தர் அமைதியானவர், சினிமாவுக்கே உரிய எந்த பழக்க வழக்கமும் இல்லாதவர். கொடுக்கல் வாங்கலில் அத்தனை நேர்மையானவர். அவருக்கே சினிமா கொடுத்திருக்கும் பரிசு மன உளைச்சல்தான். ஒரு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து பல தயாரிப்பாளர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர், பல நட்சத்திரங்களை உருவாக்கியவர், பல டெக்னீஷயன்களை கொண்டு வந்தவர். அவரை திரும்பிப் பார்க்ககூட யாரும் இல்லையென்கிறார்கள்.

இந்த செய்தி வதந்தியாக இருந்தால் சந்தோஷம். உண்மையாக இருந்தால் சினிமா கொஞ்சம் திரும்பி பார்க்கட்டும்.

Advertisement
அமலாபாலுக்கு கார் பரிசளித்த பைனான்சியர்!அமலாபாலுக்கு கார் பரிசளித்த ... உதவிக்கு கூட யாரும் முன்வராத நண்பர்கள்!! உதவிக்கு கூட யாரும் முன்வராத ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vindhai
  • விந்தை
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : மனிஷாஜித்
  • இயக்குனர் : ,லாரா
  Tamil New Film Madurai Mavendhargal
  Tamil New Film Yokiyan varran sembai ulle thokki vai
  Tamil New Film Natpathigaram
  • நட்பதிகாரம்
  • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
  • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
  • இயக்குனர் :ரவிச்சந்திரன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in