பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
தெலுங்கில் ராணாவுடன் ஒரேயொரு படத்தில் மட்டும்தான் நடித்துள்ளார் த்ரிஷா. அதற்குள் அவர்களுக்குள் காதல் சிக்குபுக்கு ஓடத் தொடங்கி விட்டது. அதன்பிறகு அவர்கள் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவே இல்லை. இருப்பினும், அடிக்கடி ராணாவை ஐதராபாத் சென்று சந்தித்து காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார் த்ரிஷா. பின்னர், ராணாவின் குடும்ப நிகழ்ச்சிகளிலும் உறவினர் போன்று கலந்து கொண்டு வந்தார் த்ரிஷா. அதேபோல் ராணாவும் அடிக்கடி சென்னைக்கு ரகசிய விசிட் அடித்து த்ரிஷாவுடன் ரியல் டூயட் பாடி வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல், அவர்களின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது. திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றுகூட கூறப்பட்டது. ஆனால் அதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று வழக்கம்போல் கூறினர்.
இந்த நிலையில், தற்போது கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்றொரு தெலுங்கு படத்தில் ராணாவுடன் இணைந்திருக்கிறார் நயன்தாரா. அதிலும் ஓவர் கிளாமர் காட்டியிருப்பதோடு, அதிக நெருக்கம் காட்டியும் நடித்திருக்கிறார். இதனால் ராணாவுக்கு கொண்டாட்டம் என்றபோதும் த்ரிஷாவுக்குத்தான் திண்டாட்டமாகி விட்டது. ராணாவை நேரில் சென்று சந்தித்து, இத்தனை நெருக்கமாக நடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? என்று உரிமையோடு குரல் கொடுத்தவர், குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அதையடுத்து, இனிமேல் எந்த நடிகையுடனும் ஓவர் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று த்ரிஷாவுக்கு தலையில் அடித்து சத்யம் செய்துள்ளாராம் ராணா. அதன்பிறகுதான் த்ரிஷாவின் கோபம் அடங்கி ஆசுவாசமடைந்துள்ளாராம்.