சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |
"கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா..." பாட்டுக்கு அமீருடன் ஆடியவர் நீது சந்திரா. அந்த அறிமுகத்தில் இருவரும் நெருக்கமாக ஆதிபகவன் படத்தில் நீது சந்திராவை ஹீரோயின் ஆக்கிவிட்டார் அமீர். பக்கா கமர்ஷியல் படத்தில் அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார் நீது. அதாவது கையில் எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருக்கிற கேரக்டர். சிகரெட் பழக்கம் இல்லாத நீது சந்திரா படப்பிடிப்பின் போது காட்சிக்காக ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் வரை சிகரெட் புகைக்க வேண்டியது இருந்ததாம். இதுதவிர சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து பழக படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் பாக்கெட் கணக்கில் ஊதித் தள்ளியிருக்கிறார். விளைவு நீது இப்போது நிஜமாகவே பிடிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு நாளைக்கு பத்து சிகரெட் வரைக்கும் ஊதுகிறாராம். "இப்பெல்லாம் சிகரெட் பிடிச்சாத்தான் சுறுசுறுப்பா இருக்கறதா உணர்றேன். இதை எப்படி தவிர்க்கிறதுன்னு தவிக்கிறேன்"னு நெருக்கமானவங்ககிட்ட புலம்புறாராம்.