சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை |
நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை புத்தகமாக வெளியிட போகிறாராம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு, மங்காத்தா பார்ட்டியில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக பின்னணி பாடகர் சரண் மீது புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தால் சிலகாலம் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். மேலும் தனது சொந்த வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் உள்ளிட்டவைகளை படமாக இயக்க போவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இப்போது அந்த முடிவை மாற்றி இருக்கிறாராம் சோனா. அதற்கு பதிலாக, தனது வாழ்க்கை நிகழ்வுகளை புத்தகமாக வெளியிடப் போகிறாராம். மேலும் தான் நடத்திவரும் யுனிக் நிறுவனம் பற்றியும் அந்த புத்தகத்தில் எழுத உள்ளாராம். இந்த புத்தகம் வெளியாகும்போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.