Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மானை வலையில் சிக்க வைத்த புயல்

03 ஏப், 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே காதல் கலைகளில் தேர்ந்தவராக இருந்தவர் ஆக இருந்தவர் அந்தப் புயல். ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்பதில் சிறந்தவர். அவருடைய காதல் வலையில் சிக்கியவர்கள் பலர்.

சமீபத்தில் அந்த புயல் நடிகர் மூன்றெழுத்து வெள்ளை வெளேர் நடிகையைக் காதலிக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. இருந்தாலும் அது காதல் வரை செல்லாமல், நட்போடு நின்றுவிட்டது. நடிகையின் எச்சரிக்கை உணர்வுதான் அதற்குக் காரணம் என்றார்கள். இப்போது அந்தப் புயல், இரை தேடிச் செல்லாத மான் படத்தில் நடித்த நடிகையை காதல் வலையில் சிக்க வைத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

உலோக வகையைச் சேர்ந்த தனிமம் ஆன பாதரசம் படத்தில் புயல் நடிகர் நாயகனாக நடித்து வருகிறார். யாருமே பேசாமல் நடிக்கும் அந்தப் படத்தில் நடிக்கும் போது இரை தேடிச் செல்லாத படத்தில் நடித்த நாயகியின் மனசை பேசியே கவர்ந்துவிட்டார் என்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகமாச்சே, என்று சிலர் சுட்டிக்காட்டியும் விட்டார்கள். காதலுக்குக் கண் இல்லை என்பது காலம் காலமாக போய்க் கொண்டிருப்பதுதானே...

Advertisement
தேசிய கட்சியில் பிரகாச ராஜாதேசிய கட்சியில் பிரகாச ராஜா மூணுஷாவின் விடா முயற்சி மூணுஷாவின் விடா முயற்சி


வாசகர் கருத்து (3)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
10 ஏப், 2018 - 15:12 Report Abuse
பஞ்ச்மணி பயபுள்ளைங்க சினிமாவை அறிவை நினைச்சு மெச்சறேன் எம்புட்டு அறிவு எம்புட்டு அறிவு இதே ஒரு யூ,பீ,எஸ்,ஸி பரிச்சையில் பொது அறிவை பத்தி கேட்டா பரிட்சையில " out of syllabus" கேள்வி அதிகம்பா அதனால தான் நாம எல்லாம் பாஸ் பன்ன முடியாம போயிடுத்துன்னு பேச வேண்டியது
Rate this:
mohan - muscat,ஓமன்
03 ஏப், 2018 - 18:20 Report Abuse
mohan பிரபு தேவா -பிரியா பவானி ஷங்கர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in