ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே காதல் கலைகளில் தேர்ந்தவராக இருந்தவர் ஆக இருந்தவர் அந்தப் புயல். ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்பதில் சிறந்தவர். அவருடைய காதல் வலையில் சிக்கியவர்கள் பலர்.
சமீபத்தில் அந்த புயல் நடிகர் மூன்றெழுத்து வெள்ளை வெளேர் நடிகையைக் காதலிக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. இருந்தாலும் அது காதல் வரை செல்லாமல், நட்போடு நின்றுவிட்டது. நடிகையின் எச்சரிக்கை உணர்வுதான் அதற்குக் காரணம் என்றார்கள். இப்போது அந்தப் புயல், இரை தேடிச் செல்லாத மான் படத்தில் நடித்த நடிகையை காதல் வலையில் சிக்க வைத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
உலோக வகையைச் சேர்ந்த தனிமம் ஆன பாதரசம் படத்தில் புயல் நடிகர் நாயகனாக நடித்து வருகிறார். யாருமே பேசாமல் நடிக்கும் அந்தப் படத்தில் நடிக்கும் போது இரை தேடிச் செல்லாத படத்தில் நடித்த நாயகியின் மனசை பேசியே கவர்ந்துவிட்டார் என்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகமாச்சே, என்று சிலர் சுட்டிக்காட்டியும் விட்டார்கள். காதலுக்குக் கண் இல்லை என்பது காலம் காலமாக போய்க் கொண்டிருப்பதுதானே...