இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கோலிவுட்டின் இப்போதைய ஹாட்-டாக் கமல்-அஜித் பற்றிய செய்தி தான். அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா...? விரைவில் கமல் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்தும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போகிறாராம். கமலின் தசாவதாரம் படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இப்படம் வெளியான நேரத்தில் கமலுக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே சிறு முட்டல் மோதல் இருந்தது. இப்போது அந்த மோதல் சரியாகி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையபோகிறார்களாம். விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தும் நடிக்க போகிறாராம்.
ஏற்கனவே அஜித்துக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது சரியாகிவிட்டதாகவும், கமல் நடிக்கும் படத்தில் நீங்களும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அஜித்திடம் ஆஸ்கர் தரப்பு பேசியதாகவும், அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.