'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் பெரிய பட்ஜெட்டில் தயாராகப் போகும் அந்த பிரமாண்ட படத்தில் நடிக்க பம்ளிமாஸ் நடிகையை டைட்டில் கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார்கள். அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம். என்னதான் மேக் அப் போட்டு, மகாராணி மாறி அலங்கரித்து வாளை கையில் கொடுத்து போஸ் கொடுக்க சொன்னாலும் எல்லாவற்றையும் மீறி முன்னால் வந்த நிற்பது அவரது அசட்டு சிரிப்புதானாம். மகாராணிக்கான கம்பீரம் வருவதாக இல்லையாம். பல முறை முயற்சித்தும் ஒரு சரித்திர கேரக்டருக்கான கம்பீரம் இல்லையாம். அதனால் டைட்டில் கேரக்டர் தவிர்த்து அழகான இளவரசி கேரக்டர் தர்றோம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்களாம்.