ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"தென்மேற்குப் பருவக்காற்று" இயக்குனர் சீனுராமசாமி, தற்போது "நீர்ப்பறவைகள்" என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம். மீனவ இளைஞன் பற்றிய இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டது என்னவோ "பசங்க" விமல் தானாம். ஆனால் தற்போது ஹீரோ வாய்ப்பு விமலிடம் இருந்து விஷ்ணுவிடம் சென்றுவிட்டதாக தெரிகிறது.
விஷ்ணு, "வென்னிலா கபடிக்குழு" , "குள்ளநரி கூட்டம்" ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் வேட்டை நடந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் விமலுக்குப் பதில் விஷ்ணு ஒப்பந்தமானது மட்டும் விளக்கம் இல்லாமல் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்!