ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஓயாத அலைகள் நாயகியின் சகோதரி. அலைகளின் நாயகி இரண்டு மகள்களையும் சினிமாவிற்கு கொண்டு வந்து இரண்டு முயற்சியுமே தோல்வி அடைந்து நிற்க... இப்போது அக்கா தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார். அமெரிக்காவில் படிக்கும் மகனுக்கு தமிழ் சினிமாவில் பன்ஞ் டயலாக் பேசி பறந்து பறந்து அடிக்க ஆசை, இதனால் கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்டாராம். இப்போது மகனுக்காக கதை கேட்கிறார் மாஜி நாயகி. அதோடு தயாரிப்பாளரும் தேடுகிறார். தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் சொந்தப் படம் எடுத்தாவது மகனை ஹீரோவாக்கியே தீருவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.