'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அழகும், குரலும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற வெகு சில நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பஹத் பாசில் ஜோடியாக 'அன்னையும் ரசூலும்' படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்த இவருக்கு அங்கே அதிக அளவில் வரவேற்பு இருந்தாலும் கூட, தனக்கு மலையாளம் பேசுவதில், புரிந்துகொள்வதில் கொஞ்சம் பிரச்சனை இருப்பதால் நிறைய வாய்ப்புகளை தவிர்த்துவிட்டாராம். இருந்தாலும் வருடத்திர்கொன்று என்கிற கணக்கில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள 'தோப்பில் ஜோப்பன்' படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதுவரை நான்கு மலையாள படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், பஹத் பாசில் என நான்கு ஹீரோக்களுடன் நடித்துவிட்ட ஆண்ட்ரியாவுக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த நான்கு படங்களிலும் தன்னை உம்மணா மூஞ்சியாகவே காட்டிவிட்டார்கள் என்பதுதான். படத்தின் கேரக்டர்கள் அந்த மாதிரி என்றாலும் மலையாள இயக்குனர்கள் அனைவரும் சொல்லிவைத்த மாதிரி தன்னை சீரியசான கேரக்டர்களிலேயே பயன்படுத்துவதில் ஆண்ட்ரியாவுக்கு உடன்பாடு இல்லையாம்.. நான் கலகலப்பான பெண்.. எனக்கு ஜாலியான கேரக்டர்களையும் தாருங்கள் என சீரியஸாக கதை சொல்ல வருபவர்களை சீரியஸாகவே திருப்பி அனுப்பி விடுகிறாராம் ஆண்ட்ரியா..