இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' |
சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.. எப்போதுமே ஹீரோவின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட வேண்டுமென்றால், வில்லனின் கதாபாத்திரம் அதே அளவுக்கு வலுவானதாக இருக்கவேண்டும்.. ஒப்பம் படத்தில் மோகன்லாலுக்கு நிகராக அப்படியொரு சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டுவது ஒருபக்கம் இருக்க, சேனல்களில் தான் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சமுத்திரக்கனியை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் மோகன்லால்.
சமுத்திரக்கனி ஒரு நல்ல இயக்குனர், கதாசிரியர், நடிகர் என்பதையும் தாண்டி அவர் மலையாள சினிமாவை அதிகம் நேசிப்பவர் என்பது தான் மோகன்லாலுக்கு சமுத்திரக்கனியை ரொம்பவே பிடித்துப்போக காரணம். அவர்தான் இயக்குனர் பிரியதர்ஷனிடம் இந்த வில்லன் கதாபாத்திரத்தை சமுத்திரக்கனிக்காக பரிந்துரைத்தாராம். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'சிகார்' படத்தில் நக்சலைட் தலைவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.