ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா நாயகனாக நடிக்கின்றார். தெலுங்கிலும் பிரேமம் என்ற பெயரிலேயே இயக்குனர் சண்டூ மொண்டேடி இயக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், ஸ்ருதிஹாசன், மடோனா செபாஸ்டியன் என மூவர் நாயகிகளாக நடிக்கின்றனர். அக்டோபர் முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் பிரேமம் படத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான நாகார்ஜூனா மற்றும் வெங்கடேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
நாகசைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனா, வெங்கடேஷின் தங்கை லக்ஷ்மியின் முன்னாள் கணவர் ஆவார். நாகசைதன்யா தனது படத்தில் தந்தை மற்றும் தனது மாமா நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷும், ஓம் நமோ வெங்கடேசாய எனும் பக்தி படத்தில் நாகார்ஜூனாவும் பிசியாக இருப்பினும் நாகசைதன்யாவிற்காக நேரம் ஒதுக்கி பிரேமம் படத்தில் நடித்துள்ளனராம்.