ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடைத்தெரு நடிகையின் காதலன் நடித்த படங்கள் அனைத்துமே தியேட்டருக்கு போன வேகத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் மட்டும் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார். தற்போது குழந்தைகள் காற்று ஊதி விளையாடும் பொருளின் பெயரைக் கொண்ட படத்திற்கு ஒன்றரை கோடி சம்பளம் கேட்டாராம். ஒரு கோடி தருவதாக கம்பெனி சொல்லியதாம். அதற்கு அவர் மசியவில்லை. ஒன்றரை கோடி சம்பளம் தருவதாக ஒப்புக் கொண்ட கம்பெனி, "கடைத்தெரு நடிகையை பிக்ஸ் பண்ணிக் கொடுங்க கேட்குற சம்பளத்தை வாங்கிக்குங்க"ன்னு சொன்னாங்களாம். நடிகரும் அப்படியே செய்து கொடுத்தாராம். சம்பளம் படத்தின் பட்ஜெட் எல்லாம் சேர்த்து 10 கோடிக்கு மேல வருதாம். நம்ம ஆளு படம் மாதிரி கடைத்தெரு நடிகைக்கும், நடிகருக்குமான நிஜ காதலை கிளப்பி விட்டு படத்தை ஓட வைத்து காசு பார்த்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.