இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் சுகுமார் தயாரிப்பில் வெளிவந்த குமாரி 21F திரைப்படம் வெற்றி பெற்றதால் மேலும் படங்களை தயாரிக்க இயக்குனர் சுகுமார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். குமாரி 21F படத்தை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரதாப் அடுத்து இயக்கவிருக்கும் படத்தையும் சுகுமார் தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கிய குமாரி 21F திரைப்படம் வெற்றி பெற்றதாலும் தற்போது பிரதாப் கூறிய கதை பிடித்திருந்ததாலும் அவரது படத்தை தயாரிக்க சுகுமார் ஒப்புக்கொண்டாராம். இப்படத்தில் நடிகர் சர்வானந்த் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பரீ புரொடக்ஷ்ன் பணிகளை துவங்கியுள்ள பிரதாப் விரைவில் படப்பிடிப்பை துவங்குவார் என சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்கும் நாயகியை தேடி வரும் பிரதாப், குமாரி 21F படத்தில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஹீப்பா படேலை தனது அடுத்த படத்திலும் நாயகியாக நடிக்க வைக்க யோசித்து வருகின்றாராம்.