ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குனர் விவி விநாயக் இயக்கும் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் இயக்கிய கத்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் கத்திலான்டோடு படத்தின் திரைக்கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றம் செய்துள்ளனராம்.
கத்தி படத்தில் சமந்தா நடித்த வேடத்தில், கத்திலான்டோடு படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளாரார் என கூறப்படுகின்றது. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்துள்ள சுனில் கத்திலான்டோடு படத்தில் சிரஞ்சீவியின் நண்பராக நடிக்கவிருப்பதாக முதலில் கூறப்பட்டது பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சுனில் இப்படத்தில் நடிக்கவில்லை என தெரியவந்தது.
சுனில் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ஜக்கன்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுனில் சிரஞ்சீவியின் 150வது படத்தில் தான் நடிப்பதாகவும் ஆகஸ்டில் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தனது கதாபாத்திரம் குறித்த தகவல்களை சுனில் தெரிவிக்கவில்லை.