ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பரில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மைத்திரி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் விநியோக உரிமைக்கான விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஜனதா கேரேஜ் படத்தின் தெலுங்கு தொலைக்காட்சி உரிமம் ரூ 10 கோடிக்கும் ஹிந்தியில் ரூ 6 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். சமந்தா மற்றும் நித்யா மேனன் என இரு நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.