ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
வழக்கமான தெலுங்கு மசாலா படங்களைப் போல் அல்லாமல் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நானி நடிப்பில், ஜென்டில்மேன் திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் இயக்குனர் விரின்சி வர்மா இயக்கும் ரொமேன்டிக் படத்தில் நானி நடிக்கின்றார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் ஹரிதா ஹாரம் நிகழ்ச்சியில் நேற்று(ஜூலை 24) படக்குழுவினருடன் நானி கலந்து கொண்டார். நானி மற்றும் படக்குழுவினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானி தனது ரசிகர்களும் பொதுமக்களும் மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் ஜெமினி கிரண் தயாரிக்கும் விரின்சி வர்மா - நானி படத்தை செப்டம்பர் 17ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அஸ்ட செம்மா, பிள்ள ஜமீந்தார், பலே பலே மாகாதேவோ போன்ற நானியின் படங்கள் செப்டம்பரில் வெளிவந்து வெற்றி பெற்றதால் இப்படத்தையும் செப்டம்பரில் வெளிட நானி முடிவு செய்துள்ளாரம்.