மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தோழா படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு விசிட் அடித்தார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகர்ஜூனா, கார்த்தியுடன் இணைந்து தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் தயாரான திரைப்படம், தமிழில் தோழா என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்சமயம் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடித்து வரும் நாகார்ஜூனா, நிர்மலா கான்வென்ட் என்ற படத்தை தயாரித்து வருகின்றார். பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் நிர்மலா கான்வென்ட் படத்தில் முதன் முறையாக நாகார்ஜூனா தனது சொந்த குரலில் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம்.
இப்பாடல் இடம் பெறும் நிர்மலா கான்வென்ட் படத்தின் டிரைலர் தெலுங்கு கபாலி படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரோஷன் சலுர் இசையில் நாகார்ஜூனா பாடியுள்ள டூயட் பாடல் நாளை (ஜூலை 24) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.