Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒளி நடிகரின் பிரம்மாண்டமான மாளிகை

18 ஜூன், 2016 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Cinegossips

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகரின் குடும்பத்தினர் திரையுலகில் தங்களது குடும்பத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில வருடங்களாகவே சில வேலைகளைப் பார்த்து வருவதாக மூத்த திரையுலகினர் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் பின்னணியில் இந்தக் குடும்பத்தினரின் செயல்பாடு அதிகம் என்கிறார்கள். அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மீதும் கண் வைத்திருக்கிறார்களாம்.


இதனிடையே, சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான தியாகராய நகரில் மார்க்கண்டேய நடிகரின் மூத்த நடிகரான பகலில் ஒளி தரும் பெயரைக் கொண்ட நடிகர் கட்டியுள்ள பிரம்மாண்டமான பங்களாவின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளதாம். இரண்டு தெருக்களை இணைக்கும் அளவிற்கு சுமார் எட்டு கிரவுண்டு இடத்தில் மூன்று கிரவுண்டுக்கும் மேல் கட்டப்பட்ட மூன்று அடுக்கு மாடி கொண்ட அதி நவீன வசதி கொண்ட பிரம்மாண்டமான பங்களா ஒன்றை அவர் கட்டியிருக்கிறார். கிரவுண்டுகளில் மதிப்பு மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் என்கிறார்கள். அதில் கட்டியுள்ள வீட்டின் பட்ஜெட் மட்டும் சுமார் 50 கோடியாம்.


தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் கூட அந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒளி' நடிகர் மாளிகை கட்டியுள்ள அந்த இடத்தைப் பற்றிக் கூட சில பிரச்சனைகள் வந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டதாம். இவ்வளவு பெரிய மாளிகையின் புதுமனை புகு விழாவிற்கு திரையுலகத்திலிருந்து யாரையும் அழைக்காமல் குடும்பத்தினர் பங்கு பெறும் நிகழ்ச்சியாக மட்டும் நடத்த உள்ளார்களாம்.


ஏற்கெனவே, இந்தக் குடும்பத்தினர் மீது பலரின் 'கண்' திருஷ்டி இருக்க மாளிகையின் மீதும் அனைவரது கண்ணும் படக் கூடாது என்பதே அதற்குக் காரணமாம்.


Advertisement
காதலரை பிரிகிறாரா தாரா?காதலரை பிரிகிறாரா தாரா? அப்பா படத்துக்கு தடைபோட்ட மகன் அப்பா படத்துக்கு தடைபோட்ட மகன்


வாசகர் கருத்து (4)

pavi - port blair  ( Posted via: Dinamalar Android App )
03 ஜூலை, 2016 - 22:40 Report Abuse
pavi சூர்யா சிவகுமார்
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜூன், 2016 - 15:33 Report Abuse
Ramesh Rayen அவர் காசு அவர் வீடு - உங்களுக்கு என்னையா
Rate this:
Susainathan - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூன், 2016 - 13:37 Report Abuse
Susainathan Shivakumar family Surya & karthik . Tamil cinema markandayan Shivakumar everyone know that
Rate this:
Balou - PARIS,பிரான்ஸ்
18 ஜூன், 2016 - 12:32 Report Abuse
Balou அவரு சம்பாரித்த காசில் வாங்கறாரு கட்டுறாரு. 'சூரிய' பகவான் அருள் பார்வை வீட்டின்மீது பட்டால் அதுபோதும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in