பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிக் 2 படத்தின் தோல்விக்கு பின்னர் ரவிதேஜா நடித்த பெங்கல் டைகர் படமும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தில் ராஜூ தயாரிப்பில் ரவிதேஜா நடிக்கவிருந்த படமும் கைவிடப்பட்டது. இருப்பினும் மனம் தளராத ரவிதேஜா ஹிந்தி திரைப்படமான ஜாலி எல்எல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார். 2013ல் இயக்குனர் சுபாஷ் கபூர் இயக்கிய இப்படத்தில் அர்ஷத் வர்சி, பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தமிழ் ரீமேக் உதயநிதி நடிப்பில் மனிதன் திரைப்படமாக உருவானது. ஜாலி எல்எல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளாராம். தனக்கு நெருக்கமான இயக்குனர்களிடம் ஜாலி எல்எல்பி படத்தின் தெலுங்கு ரீமேக் சரிவருமான என ஆலோசனையும் கேட்டு வருகின்றாராம் ரவிதேஜா. ஆலோசனையின் முடிவு சரி என வரும் பட்சத்தில் ரவிதேஜாவை விரைவில் ரசிகர்கள் வக்கீலாக பார்க்கலாம்.