பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டில் அதிரடி மசாலா படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு அல்லு அர்ஜூன்-ராகுல் ப்ரீத்தி சிங் கூட்டணியில் இயக்கிய சரைய்னொடு திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த சரைய்னொடு திரைப்படம் அதிகம் வசூல் செய்த முதல் ஐந்து தெலுங்கு படங்களின் வரிசையிலும் இடம் பிடித்து விட்டது. இப்படத்திற்கு பின்னர் அல்லுடு சீனு, ஸ்பீடுனோடு போன்ற படங்களில் நடித்த சாய் ஸ்ரீவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை பொய்யபடி ஸ்ரீனு இயக்கவுள்ளார். மேலும் பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களிடமும் ஸ்ரீனு கால்ஷீட் கேட்டுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ், பூரி ஜெகன்நாத் படங்களில் நடிக்கவுள்ள மகேஷ் பாபு பொய்யபடி ஸ்ரீனுவிற்கு இன்னும் கால்ஷீட் கொடுக்கவில்லையாம். அடுத்ததாக பாகுபலி 2 படத்தில் பிசியாக இருக்கும் பிரபாஸை அணுக பொய்யபடி ஸ்ரீனு முடிவு செய்துள்ளாராம்.