ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதில் உள்ள ஆபத்து இப்போதுதான் விநியோகஸ்தர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. நாம் பல கோடிகளைக் கொடுத்து வாங்கும் படம் நியாயமான விலைதானா என்று யாருமே யோசிப்பதில்லை. பெரிய விலையைக் கொடுத்து வாங்கிவிட்டு படம் ஓடாமல் போனால் நஷ்டம் என்று அலறுகிறார்கள். சமீபத்தில் வெளியான தளபதி படத்தில் கூட இந்த பிரச்னை எழ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பிரகாசமான நடிகர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் அந்த சயின்ஸ் பிக்சன் படத்திற்கும் இப்போது பிரச்னை எழுந்துள்ளதாம். இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டதாக எண்ணிய சில விநியோகஸ்தர்கள் படம் வேண்டாம் அட்வான்ஸை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள், சம்பந்தப்பட்டவர்களை சமாதானம் செய்ய நடிகர் தரப்பு முயற்சித்தது. ஒப்புக்கொண்ட விலையில் 60 சதவிகித தொகைக்கு படத்தைக் கொடுங்கள் என்று விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கின்றனர். இதற்கு நடிகர்கள் தரப்பு ஒப்புகொள்ளவில்லையாம். இதனால் படக்குழு அப்செட்டில் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.