சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இந்நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் தான் ஜிமில் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். நடிகர் நடிகைகளைப் பொருத்த வரை அவர்களது உடலின் கவர்ச்சியான இளமைத் தோற்றமே அவர்களுக்கு மூலதனம் என்பதால் அவற்றை பராமறிப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்றவை மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் தற்போது பரவலாக நடந்து வருகின்றது. நடிகர் ரானா, நடிகை சமந்தா போன்றோர் தங்கள் ஜிம் வீடியோவை வெளியிட்டது போல் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கும் தனது ஜிம் வீடியோவ வெளியிட்டுள்ளார்.