'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட அந்த ஞானி இசையமைப்பாளருக்கு அவர் இசையமைத்த ஆயிரமாவது பட வெளியீட்டின் போதே பாராட்டு விழா நடத்த திட்டமிட்டார்கள், ஆனால் சென்னையை புரட்டிப்போட்ட மழைவெள்ளத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் பாராட்டு விழா நடத்த வேலைகள் நடந்து வருகிறது. தனியார் டிவி ஒன்று இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்தவிழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும்நிலையில் இந்த விழாவை திரையுலகம் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாராட்டு விழாவை நடத்தவும், அதை ஒளிபரப்பும் டிவிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏற்கனவே படங்களின் சாட்டிலைட்ஸ் விற்பனை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தச்சூழலில் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விற்கக்கூடாது என்று சங்கம் சார்பில் ஞானியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாம். ஆனால் ஞானியோ அதை துளியும் காதில் வாங்கவில்லையாம். அதனால், கடுப்பான சங்கத்தினர், பாராட்டுவிழாவுக்கு திரையுலகம் சார்பில் யாரும் செல்ல வேண்டாம் என்று ரகசிய தகவல் அனுப்பியிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.