‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் ஐ. இப்படத்தில் விளம்பர மாடலாக நடித்து வில்லத்தனம் காட்டிய உபேன் பட்டேல் டோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் வீரபத்ர சௌத்திரி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு சுட்டலப்பயி என பெயரிடப்பட்டுள்ளது. ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை பிரணிதா நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் வில்லனாக நடிக்க உபேன் பட்டேல் ஒப்பந்தமாகியுள்ளார். ரன் போல ரன் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ள உபேன் படேல் ஐ படத்திற்கு பின்னர் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார். தயாரிப்பாளர் வெங்கட் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதரபாத்தில் நடைபெற்று வருகின்றன.