தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனியாக வந்து வென்றவனுக்கு வில்லனாக நடித்த சாமி நடிகரை அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அணுகினார்கள். "3 கோடியை எடுத்து வையுங்க மேற்கொண்டு பேசலாம்" என்று சொல்ல, அதிர்ச்சியுடன் திரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதுமட்டுமல்ல வில்லன் அவதாரத்திற்கு பிறகு அவரது கிரேஸ் கூடியிருப்பதால் மேலும் சில படங்களுக்கு கேட்டுப் போனார்கள். "ஹீரோவுக்கு என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ அதிலிருந்து ஒரு ரூபாய் குறைவாக கொடுங்க போதும்" என்கிறாராம். என்னங்க இம்புட்டு சம்பளம் கேட்குறீங்கன்னு யாராவது கேட்டால் "உங்களுக்கு கொடுக்கிற 40 நாள் கால்ஷீட்டை என் பிசினசில போட்டால் நீங்க கொடுக்கிற சம்பளத்தைவிட அதிகமா சம்பாதிப்பேன்"னு கூலாச் சொல்கிறாராம். "ஆள்தான் அழகே தவிர குணம் அப்படியில்லை"ன்னு தயாரிப்பாளர்கள் புலம்பித் திரும்புறார்கள்.