‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆர்ட் டைகர் தயாரிப்பாளருக்கு கில்லி நடிகரின் கால்ஷீட்டை வாங்கி கொடுப்பது கில்லி நடிகரின் தந்தைகுலம் தான். அதற்கு நன்றிக்கடனாக தயாரிப்பாளர் அவருக்கு பெரிதாக எதையாவது செய்து கொடுப்பார். கடந்த முறை கன் படத்துக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுத்ததற்காக அவரை சங்கத்துக்கு தலைவராக்க அனைத்து செலவையும் ஏற்றுக் கொண்டதாக ஒரு பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது. இப்போது எலி இயக்குனரின் படத்தில் நடிக்க மகன் கால்ஷீட்டை வாங்கி கொடுத்தற்கு நன்றிக் கடனாக அவரை ஹீரோவாக போட்டு படமே எடுக்கிறார். தலைவராக வேண்டும், நடிகராக வேண்டும் என்கிற தந்தைகுலத்தின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து கில்லி நடிகரின் கால்ஷீட்டை வாங்குகிறாராம் தயாரிப்பாளர். "இந்த டீலிங் புதுசா இருக்கே"ன்னு ஆச்சர்யப்டுகிறார்கள் கோடம்பாக்க சினிமாவாசிகள்.