தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லயன் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி விட்டு மூன்றாவது பாகத்தை இயக்க எப்போதோ தயாராகி விட்டார் அந்த இரண்டெழுத்து டைரக்டர். ஆனால் அந்த படத்தில் நடிக்கயிருக்கும் மூன்றெழுத்து நடிகர், வேறொரு படத்தில் நடித்தபடி பல மாதங்களாக மேற்படி டைரக்டரை டீலில் விட்டு வருகிறார்.
இதனால் பல மாதங்களாக பொறுத்துக்கொண்டிருந்த இயக்குனர், சமீபத்தில் ஒருநாள் நடிகரை தொடர்பு கொண்டு தனது கோபத்தை காட்டி விட்டாராம். உங்களுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரு படத்தையே நான் முடித்திருப்பேன். என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறீர்கள் என்று சூடு பறந்தாராம்.
இதையடுத்து கூடிய சீக்கிரமே வந்து விடுகிறேன் என்று அவரிடம் ஸாரி கேட்டாராம் நடிகர். என்றாலும், நடிகர் தன்னை இந்த அளவுக்கு காக்க வைத்து விட்டதால், இந்த படத்தோடு அவரை ஏறக்கட்டி விடலாமா என்று யோசிக்கிறாராமாம் இரண்டெழுத்து டைரக்டர்.