தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆச்சர்யம் என்றால் இதுதான் ஆச்சர்யம்... மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்த படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபிசில் மண்ணைக்கவ்வி வருகின்றன... மலையாளத்தில் ஸ்டார் இயக்குனர்களில் நம்பர் ஒன் என சொல்லப்படும் ஜோஷியின் இயக்கத்தில் 'ரன் பேபி ரன்' படத்திற்கு பிறகு வெளியான சலாம் காஷ்மீர்', 'லைலா ஒ லைலா' இரண்டும் பிளாப் வகையறாக்கள்.. கதாசிரியர் ஏ.சி.விஜேஷ் கதை எழுதியது இரண்டே படங்களுக்குத்தான். இரண்டுமே மம்முட்டிக்குத்தான். இரண்டில் ஒன்றான 'இம்மானுவேல்' ஆவரேஜுக்கும் கொஞ்சம் மேலே.. 'அச்சா தின்' படமோ ஒரு வாரம் கூட தியேட்டரில் தங்கவில்லை..
இப்படி தற்போதைய நிலவரப்படி பிளாப் லிஸ்டில் இருக்கும் மூவர் தங்களது அடுத்த படத்திற்காக கைகோர்த்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யம் இல்லாமல் வேறென்னவாம்..? படத்தின் பெயர் 'சிங்கிள்'. வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுவரை ஆக்சன் ரூட்டிலேயே பயணித்து வந்த ஜோஷி இந்த படத்தில் டேக் டைவர்ஷன் எடுத்து காமெடி ஏரியாவுக்குள் நுழைய இருக்கிறாராம். சீனியர் ஹீரோக்களையே வைத்து இயக்கிவந்த ஜோஷி ஒரு மாறுதலுக்காக யூத் கூட்டணி அமைத்திருப்பதால் ஏற்கனவே அவரது 'செவன்ஸ்', 'ராபின் ஹூட்' ஆகிய படங்களுக்கு கிடைத்த வெற்றியை இதிலும் எதிர்பார்க்கலாம்.