இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியைத் தொடர்ந்து கனிமொழியும் சினிமா தயாரிப்பாளர் ஆகப்போவதாக கோடம்பாக்கத்தில் புது புயல் செய்தி கிளம்பியிருக்கிறது. முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.,யுமான கனிமொழிக்கு சினிமா மீதான ஆர்வம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. முதல்வரின் குடும்பத்தில் ஏற்கனவே மு.க.முத்து, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும், மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தமிழ் சினிமாவின் பிஸியான தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். உதயநிதி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க.முத்துவின் மகன் பாடகராக, நடிகராக மாறி வருகிறார். மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஹீரோ ஆகி விட்டார்.
இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள கனிமொழி எம்.பி., முடிவு செய்திருக்கிறாராம். அவர் தயாரிக்கப்போகும் படத்தினை இயக்கப்போவது யார்? நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப்போகும் இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்கிறது விவரமறிந்த அரசியல் வட்டாரம்.