Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சினிமாவில் இருந்து ஓய்வுபெறுகிறார் ஐஸ்

24 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் பரபரப்பான காதல் ஜோடிகளில் ஒன்றான அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி, 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பை தொடர்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு ஜோதா அக்பர், சர்கார் ராஜ் உள்ளிட்ட மெகா ஹிட்டான பாலிவுட் படங்களிலும் பிங்க் பன்தர் 2 என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தார். தற்போது ரிலீசாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் ராவணன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா நடித்துள்ளார். 2006ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்த போது தான் அபிஷேக்கிற்கும்- ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் படம் ஒன்றில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், 2 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்திய படங்கள் இரண்டின் படபிடிப்புகளும் முடிந்து, வெளியிடும் தேதிக்காக காத்திருக்கிறது. இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்னும் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் தான் ராவணன் படத்தில் இறுக்கமான உடைகளை போடாமல், லூசான ஆடைகளையே தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் லூசான ஆடைகளையே அணிந்து வருகிறார். ஐஸ்வர்யாவிற்காக தனது படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கும் பணியில் ஷங்கர் இறங்கி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வுபெற ஐஸ்வர்யா ராய் தீர்மானித்துள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

PUSHPA - CHENNAI,இந்தியா
24 அக், 2011 - 15:33 Report Abuse
 PUSHPA பெஸ்ட் ஆப் LUCK
Rate this:
aaa - tamilnadu,இந்தியா
24 ஜூலை, 2011 - 22:58 Report Abuse
 aaa இது வரைக்கும் ஐஸ்வர்யா ராய் இடத்துக்கு யாரும் வரவில்லை.வரவும் முடியாது
Rate this:
hema - chennai,இந்தியா
28 டிச, 2010 - 10:54 Report Abuse
 hema புகழ் எப்ப வேணும்னாலும் கிடைக்கும். ஆனா குழந்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் பெத்துக முடியும். அதனால உடனே சினிமாவ ஓரம் கட்டி வச்சுட்டு நல்லபடியா வாழ பாருங்க.
Rate this:
பிரபு - sivakasi,இந்தியா
24 டிச, 2010 - 17:32 Report Abuse
 பிரபு ஏன் இந்த பவமானம் இது போன்ற பல அழகிகள் நிறைய இருக்கிறார்கள்
Rate this:
செந்தில் - coimbatore,இந்தியா
04 செப், 2010 - 14:10 Report Abuse
 செந்தில் hai aish , give importance to your health...
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in