தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மட்டும் ஒரு சில முன்னணி சீனியர் நடிகர்களுடன் நடிக்க வேண்டுமென்றாலும் சில இளம் நடிகைகள் சம்மதிப்பார்கள். ஆனால், தெலுங்கில் அப்படி நடிக்க விரும்பமாட்டார்கள். அதிலும் தெலுங்கில் உள்ள ஒரு சில சீனியர் நடிகர்கள் மிகவும் இளமையான நடிகையரைத்தான் ஜோடியாகப் போட வேண்டும் என்று அங்குள்ள இயக்குனர்களுக்கு உத்தரவே போடுவார்களாம். இதனால், அந்த இயக்குனர்கள் படாத பாடுபட்டு எப்படியாவது ஒரு இளம் நடிகையைத் தேடிப் பிடித்து ஜோடியாக நடிக்க வைப்பது வழக்கம். அதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் சம்பளம்.
லட்சங்களில் சம்பளத்தைப் பேசாமல் கோடிகளில் சம்பளத்தைப் பேசினால் யார்தான் நடிக்க மாட்டேன் என்று சொல்வார்கள். சில சமயங்களில் அந்த இயக்குனர் கூட அவ்வளவு சம்பளம் வாங்காத ஒருவராகத்தான் இருப்பார். ஆனாலும், படம் இயக்க வாய்ப்பு கிடைப்பதென்பது சுலபமானதா. அதனால், அந்தக் குறிப்பிட்ட சீனியர் நடிகர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்களாம். அப்படித்தான் ஒரு சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடிக்க நம்ம ஊரு மூணுஷா நடிகையை அணுகியிருக்கிறார்கள். முதலில் மறுத்தவர், பின்னர் சம்மதித்தாராம். அதற்கு வேறு ஒன்றும் காரணமல்ல, சம்பளம் கோடிகளில் என்றதும் நடிக்க சம்மதித்துவிட்டாரா. சுமார் ஒன்றரைக் கோடிக்கு மேல் அந்தப் படத்திற்காக சம்பளம் வாங்கியதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள். அங்கு இப்போதைக்கு இதுதான் ஹாட் டாபிக்காம்.