நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
தெலுங்கத் திரையுலகின் மிகப் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த நடிகருக்கும், நம்ம ஊரு மூணுஷா நடிகைக்கும் நீண்ட நாட்களாகவே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலமுறை செய்திகள் கிளம்பினாலும் இருவரும் அதை மறுத்து வந்திருக்கிறார்கள். தாங்கள் காதலர்கள் இல்லை, நல்ல நண்பர்கள் என்றுதான் சொல்வார்கள். சமீப காலமாக மூணுஷா நடிகையின் மார்க்கெட் நிலவரம் மிகவும் கீழிறங்கி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் வருடத்திற்கு ஒரு படம் வந்தாலே பெரிய விஷயம் என்றாகி வருகிறது.
இந்த நிலையில் பெரிய குடும்பத்து நடிகர் மூணுஷாவைக் கண்டு கொள்ளாமல் வேறு ஒரு நடிகையுடன் சுத்துவதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள். பழம் பெரும் ஹிந்தி நடிகையின் பெயரை தனது முதல் பெயரில் கொண்ட அந்த நடிகை சமீபத்தில்தான் ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடி சாகசம் செய்திருக்கிறார். இனி ஒரு பாடலுக்கு நடனமாட மாட்டேன், இதுதான் முதலும் கடைசி என்று பத்திரிகையாளர்சந்திப்பிலேயே அந்த நடிகை சொல்லிவிட்டார். இந்த நடிகையின் மனம் கவர்ந்த அந்த பெரிய குடும்பத்து நடிகர் அடிக்கடி மும்பை பறப்பது வழக்கமாம். அப்படி அங்கு சென்றிருந்த போதுதான் அந்த நடிகையின் நட்பு கிடைத்ததாம். இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது சமீபத்தில் வழக்கமாகி விட்டதாம்.
சீக்கிரமே அந்த நடிகையை தெலுங்குப் படங்களில் பார்க்கலாம் என்கிறார்கள். தெலுங்குத் திரையுலகின் ஹாட் நியூசாக இந்த செய்திதான் தற்போது இருந்து வருகிறது.