ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசைக்குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இளையதளபதி நடித்த படத்தில் அவருடைய தம்பியாகவே அறிமுகமாகி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவிற்கு முன்னணியில் வந்தவர் ஜெய நடிகர். ஆனால், சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றன. அடுத்ததாக கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் மார்க்கெட்டை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று யோசித்து வருகிறாராம்.
தமிழின் முன்னணி நடிகையுடன் ஜோடியாக நடித்த 'கிங் குயின்' படம் வெற்றி பெற்றாலும், அந்த படத்தின் வெற்றியில் இவரை யாருமே சேர்த்துக் கொள்ளவில்லையாம். அந்த படம் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டதும் இல்லை. இதுதான் இவரிடம் இருக்கும் மிகப் பெரிய குறை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். அவருடைய படத்தின் பிரமோஷனுக்கே கூட அவர் வரமாட்டார். எந்த பத்திரிகை பேட்டியோ, டிவி பேட்டிகளிலோ கூட அவரைப் பார்க்க முடியாது. அப்படி அவர் ஓடி ஒளிய என்ன காரணம் என்றும் தெரியவில்லை என்கிறார்கள். சில சமயங்களில் அவர் நடித்த படம் சம்பந்தப்பட்டவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
தற்போது அவர் நாயகனாக நடித்து வரும் இரண்டு படங்கள் கூட கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. விரைவில் ஒரு புதிய படத்திலும் நாயகனாக நடிக்கப் போகிறாராம். இனியாவது அவர் தன்னை மாற்றிக் கொண்டால்தான் எதிர்பார்க்கும் வெற்றியை அவர் பெற முடியும் என்கிறார்கள் கோலிவுட் ஜோசியர்கள்.