Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இயக்குனர் இமயத்தின் படத்தில் தனுஷ்

29 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

வதந்தி: பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ் என்று ஒரு செய்தி, கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. விசாரித்த உண்மை: இருப்பது தெரிய வந்தது. ஒரு நாள் தனுஷுக்கு போன்போட்ட பாரதிராஜா உடனே வரமுடியுமா என்று கேட்டாராம். அடுத்த சில நிமிடங்களில் ஜெமினி பார்ஸன் வளாகத்தில் ஆஜராகிவிட்டார் தனுஷ். அவரிடம் பரஸ்பர நல விசாரிப்புகள் மற்றும் அடுத்தடுத்த படங்கள் பற்றியெல்லாம் பேசிய பாரதிராஜா, ஒரு கதை இருக்கு கேக்கறீங்களா தனுஷ்? என்றாராம். சற்று ஷாக் ஆன தனுஷ், அய்யோ சார்... உங்க படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். கதை கேட்கணும்னு அவசியம் இல்லை என்றாராம் பணிவாக. இருந்தாலும், தான் எவ்வளவு பெரிய இயக்குனர் என்ற ஈகோவெல்லாம் இல்லாமல், பரவாயில்ல... கேளுங்க என்று சொல்லிவிட்டு, சுருக்கமாக கதையைச் சொன்னாராம். தனுஷுக்கு கதை மட்டுமல்ல, பாரதிராஜா என்ற சிகரம் தொட்ட சாதனையாளர் தன்னை நடத்திய விதம் பிடித்துவிட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம். வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்ன தனுஷை உடனே வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்களாம். வீட்டுக்கு வந்து மாமனாரிடம் சொன்ன தனுஷ் உடனே வாழ்த்தி இது நல்ல சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க என்றாராம். சிகரம் தொட்ட இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறாராம் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ராஜா - chennai,இந்தியா
05 ஜூலை, 2010 - 13:00 Report Abuse
 ராஜா வணக்கம் தனுஸ். உங்களக்கு எனது வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் சார் & கமல் சார் போல் நீங்களும் பாரதிராஜா சார் படத்துல நடித்து அடுத்த லெவல் போக எனது முதல் வாழ்த்துகள். ராஜா
Rate this:
Seeni - Bangalore,இந்தியா
20 ஜூன், 2010 - 02:49 Report Abuse
 Seeni மாடும், விவசாயமும் உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா. எதையும் யோசிச்சிட்டு பேசு.
Rate this:
Theju - Madurai,இந்தியா
06 ஜூன், 2010 - 18:14 Report Abuse
 Theju Bharadhi Raja oru vetti paya. mattayum, vevasayathayum thavira avanukku enna theriyum. Avana pathi news pottu unga supper website a waste pannadhinga.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in