ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூயார்க் இந்தியன் அசோசியன் என்ற அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரமாண்ட விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள், கலர்புல் அணிவகுப்பையும் நடத்துவர். இந்த அணிவகுப்பில் இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களும் பங்கேற்பர். இந்தாண்டு நடக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கு, பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில், வித்யா பாலனுக்கு, கிராண்ட் மார்ஷல் என்ற அந்தஸ்தும் அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில்,"நம் நாட்டின் சுதந்திர தின விழா, ஒரு சில வெளிநாடுகளில் மட்டும் தான், மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதில், அமெரிக்காவும் ஒன்று. இந்த விழாவில் பங்கேற்க, எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பெருமிதமாக உள்ளது என்கிறார்.