Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாணியை முந்திக்கொண்டு திரைக்கு வருகிறதாம் ஆல்இன்ஆல் அழகுராஜா!

28 ஜூன், 2013 - 14:17 IST
எழுத்தின் அளவு:

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக, அதையடுத்து பல புதுமுக இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லிவிட்டு தயார் நிலையில் இருந்தபோதும், அவர்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டு நடித்தார் கார்த்தி. படப்பிடிப்பு நடந்தபோது சின்னச்சின்ன சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக படத்தை முடித்து விட்டனர்.

அதையடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேசிடம் சொன்ன கதை பிடித்தால், உடனடியாக அவருக்கும் கால்சீட் கொடுத்தார் கார்த்தி. இப்படத்தில் கார்த்தியுடன் பிரபு, சரண்யா, காஜல்அகர்வால் என முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படமும் நன்றாக வந்துள்ளதாம். காமெடி, காதல், சென்டிமென்ட் என கார்த்தி இதுவரை நடித்த படங்களில் புதிய களமாக உள்ளதாம்.அதனால், இந்த படத்தின் மீது அவருக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.

அதன்காரணமாக, பிரியாணியை பின்தள்ளிவிட்டு, ஆல்இன்ஆல் அழகுராஜாவை முதலில் வெளியிட்டு தன் மீது படிந்துள்ள தோல்வி முத்திரையை அகற்ற நினைக்கிறாராம் கார்த்தி. ஆனால், பிரியாணி இயக்குனர் வெங்கட்பிரபுவோ, அதற்கு மறுக்கிறாராம். என் படம்தான் முதலில் வெளியாக வேண்டும். இன்னும் தாமதம் செய்தால், படத்தை நான் சொதப்பியிருப்பதாக மற்றவர்கள் தப்புக்கணக்கு போட்டு விடுவார்கள். மேலும், பிரியாணியும் பெரிய ஹிட் படம்தான். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தன் கருத்தை முன் வைத்து வருகிறாராம். இருப்பினும் கார்த்திதரப்பு இன்னும் அதற்கு உடன்படவில்லையாம். ஆனாலும், பிரியாணியை ஆறிப்போவதற்குள் பரிமாறியே ஆக வேண்டும் என்று தனது தரப்பு நியாயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம் வெங்கட்பிரபு.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஜூலை, 2013 - 17:35 Report Abuse
சு கனகராஜ் பிரியாணிக்கு அடுத்த படம் முட்டை பரோட்டாவா ?
Rate this:
Bharath - pondicherry  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன், 2013 - 08:29 Report Abuse
Bharath ha ha nice joke
Rate this:
appu - madurai,இந்தியா
29 ஜூன், 2013 - 13:17 Report Abuse
appu பிரியாணிய முந்திட்டு அழகுராஜா வராரோ இல்ல அழகுராஜாவ முந்திகிட்டு பிரியாணி வருதோ....படம் பாக்குறா மாறி இருக்குமா?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:47Report Abuse
சு கனகராஜ் படம் தியேட்டரை விட்டு ஓடாமல் மக்களை ஓடவைக்காமல் இருந்தால் அனைவரும் பார்க்கலாம்...
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
29 ஜூன், 2013 - 11:41 Report Abuse
Venki Raja ஒரே மாதிரி நடிப்பு கார்த்தி ரொம்ப போர்.......
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
29 ஜூன், 2013 - 10:59 Report Abuse
saravanakumar வெங்கட் பிரபு படம் எடுத்தா ஓடாதே ஏற்கனவே தொப்பை அஜீத்த வச்சி எடுத்த மங்கத்தாவையே பக்க சகிக்கலை
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in