Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்னக்கொடி என் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் படம்! கார்த்திகா

28 ஜூன், 2013 - 10:47 IST
எழுத்தின் அளவு:

மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ப்ளஸ் -2 படித்த கையோடு சினிமாவில் திறமை காட்ட வந்து விட்டார். அதுவும் எடுத்தோம் கவுத்தோம் என்று என்ட்ரி கொடுக்காமல், சிறிய வயதிலிருந்தே சினிமாவுக்காக தயார் செய்யப்பட்டு, முறையான நடிப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்டே சினிமாவில் இறக்குமதியானார்.

அப்படி தனது 17 வது வயதில் தெலுங்கில் நாகசைதன்யா நடித்த ஜோஷில் என்ற படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. தமிழ், இந்தியில் அப்போது கார்த்திகாவுக்கு ஆபர் இருந்தும் தெலுங்குதான் தனது சென்டிமென்ட் சினிமா உலகம் என்று அங்கே அறிமுகம் செய்தார் ராதா. ஆனால், அப்படி கார்த்திகா நடித்த முதல் படம் தோற்று ராதாவின் சென்டிமென்டை தகர்த்து விட்டது.

அதனால், அடுத்தபடியாக தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால் தமிழில் ராசியான நடிகையானார் கார்த்திகா. ஆனால், அதன்பிறகு பல படங்கள் தேடிவந்தும், வந்த படங்களையெல்லாம் குற்றம் குறை சொல்லி திருப்பி விட்டதால், அதையடுத்து கோலிவுட் இயக்குனர்கள் கார்த்திகாவை நிராகரிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில்தான், தன்னை அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்த பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் கார்த்திகாவுக்கு சான்ஸ் வாங்கினார் ராதா. கிராமத்து வாசனையே இல்லாமல் வளர்ந்த கார்த்திகா, ஆடு மேய்க்கும் பெண்ணாக அப்படத்தில் நடித்தார். இன்று வெள்ளிக்கிழமை அந்த படமும் திரைக்கு வருகிறது. இதனால் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் கார்த்திகா. இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் காண்பித்திருக்கிறார் பாரதிராஜா. அதனால் எனது நடிப்பாற்றலை பார்த்து விட்டு, வெயிட்டான கதாபாத்திரங்கள் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் இருந்தும் எனக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

JAIRAJ - CHENNAI,இந்தியா
04 ஜூலை, 2013 - 07:08 Report Abuse
JAIRAJ அம்மா ஒருபக்கம் "என் பொண்ணோடு வாழ்கையை பாரதிராஜா கெடுத்திட்டார். நல்லபாத்திரம் என்று சொல்லி சொதப்பிவிட்டார்." என்று, புலம்புகிறார். பெண் சொல்கிறார்," அன்னக்கொடி என் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டும்." என்று, இதில் எது மெய்? எது பொய்? எல்லாமே எனக்குத்தான் என்று அதிகமாக ஆசைப்பட்டால் இப்படித்தான்.
Rate this:
appu - madurai,இந்தியா
30 ஜூன், 2013 - 15:14 Report Abuse
appu வெளிச்சம் போட்டு காட்டபோவுதோ இல்ல இருட்டுக்குள்ள இன்னா நடந்திச்சுன்னு தெரியாமலே போவுதோ...படம் வரட்டும் பாத்துட்டு கூத்து ரசிகனுக சொல்வானுக....
Rate this:
appu - madurai,இந்தியா
29 ஜூன், 2013 - 14:20 Report Abuse
appu உன்னோட உழைப்பு மற்றும் ஒத்துழைப்பு(நடிப்பு&படபிடிப்பில்) நல்லா இருந்தா மேற்கொண்டு படம் கிடைக்கும்,....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:50Report Abuse
சு கனகராஜ் கரண்டு வந்ததும் எல்லாத்தையும் வெள்ச்சம் போட்டு காட்டு இப்போ இருட்டை விட்டு வெளியில் வா...
Rate this:
28 ஜூன், 2013 - 13:18 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) நடிப்பை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டினால் சரி .....
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூன், 2013 - 12:30 Report Abuse
SaS என்னத்த போட்டுக் காட்டுனாலும் நாங்க பாக்க தயாரா இல்லமா..! உங்க ஆத்தாக்காரிக்குத்தான் தி்ரையுலகு பத்தி் நல்லாத் தெரியுமே... அதையும் மீறி ஏன் உன்ன இந்த பாதளத்துல தள்ளுனா??.. அதுவும் பதி்னேழு வயசுலயே கூத்தாட வந்துட்டேன்னு பெரும வேற..! மானம்ன்ற ஒன்னு கொஞ்சங்கூட கெடையாதா??.. ஓ..! மன்னிச்சுடுங்க... நீங்கல்லாம் கலை வளர்க்கும் கேரள நாட்டைச் சேர்ந்தவங்கல்ல..! மறந்துட்டேன்... காட்டுங்க... காட்டுங்க... நல்லா வெளிச்சம் போட்டு காட்டுங்க..!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in