வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தற்போது ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அதனால் எத்தனை முன்னணி ஹீரோக்கள் நடித்த படமாக இருந்தாலும் வியாபாரம் என்று வருகிறபோது அவரது பெயரையும் முன்வைக்கிறார்கள். அந்த அளவுக்கு சிறந்த கமர்சியல் நாயகியாகியிருக்கிறார் அவர். ஆனால், சேட்டை படத்தின் விளம்பரங்களில் ஹன்சிகாவின் படத்தை இருட்டடிப்பு செய்து வருவதால் செம டென்சனில் இருக்கிறார் ஹன்சிகா.
இதனால் ஒருநாள், மேற்படி படத்தின் முக்கியஸ்தர்களுக்கு போன்போட்டு, படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல், காட்சிகள் என்று நிறைய கத்தரித்து விட்டீர்கள். அதைகூட நான் பொறுத்துக்கொண்டேன். ஆனால் இப்போது போஸ்டர்களில் இருந்துகூட என்னை கத்தரிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று கோபத்தை காட்டியுள்ளாராம் ஹன்சிகா.
மேலும், தற்போது நான் நடித்து வரும் சிங்கம் படத்தில் என்னை விட பெரிய நடிகை அனுஷ்காவும் இருக்கிறார். ஆனால், எனது போட்டோக்களையும் விளம்பரத்தில் தவறாமல் பயன்படுத்தி வருகிறார் இயக்குனர் ஹரி. முன்னணி இயக்குனரே அப்படி செய்யும்போது என்னை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினாராம்.