Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பவர் பாலிட்டிக்ஸ்

10 மார், 2013 - 14:50 IST
எழுத்தின் அளவு:

நெல் பயிருக்கு பெயர் பெற்ற தஞ்சையின் செல்லப் பெயர் கொண்ட இயக்குனர்தான் கடைத்தெரு நடிகையை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்திய இயக்குனரும், அறிமுகமான நடிகையும் பெரிதாக சாதிக்கவில்லை. இதனால் வறுமை தாங்க முடியாமல் ஆந்திரதேசத்துக்கே திரும்ப இருந்த நடிகையையும், அவரது தாய்குலத்துக்கும் அடைக்கலம் கொடுத்தார் இயக்குனர். இப்போது நடிகை டாப்புக்கு வந்து விட்டாலும் இயக்குனர் அப்படியேதான் இருக்கிறார். நல்ல படங்களில் பெரிய ஹீரோக்களோடு நடித்து வரும் நடிகையை தன்னோடும் நடிக்கச் சொல்லி இயக்குனர் டார்ச்சர் கொடுத்து வருகிறார். ஏற்கெனவே நன்றி கடனுக்காக நடித்துக் கொடுத்த வில்லங்க படம் கடைத்தெரு நடிகைக்கு சரிவை கொடுத்தது. இப்போது ஊரைச் சுற்றி வந்து புராணப் படம் எடுக்கிறார் அந்த இயக்குனர். அதிலும் தனக்கு ஜோடியாக நடிக்கச் சொல்லி கடைத்தெரு நடிகையை டார்ச்சர் செய்தார். டிமிக்கி கொடுத்து வந்தார் நடிகை. ஆனாலும் இயக்குனர் விடுவதாக இல்லை. தனது கடந்தகால வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்து விடுவாரோ என்று பயந்த நடிகை. நடித்து முடிக்கும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தும் வந்தார். ஆனால் இயக்குனர் ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்.

சென்னை புறநகரில் நடிகை நடித்துக் கொண்டிருந்தபோது சின்ன மின்சார வயரில் மிதித்து விட்டார், இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை "ஆ..." என்று கத்தி பின்பு சுதாரித்துக் கொண்டு அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டார். பார்த்தார் இயக்குனர் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார். "அய்யோ ஹீரோயினியை பவர் அட்டாக் பண்ணிடுச்சு" என்று செய்தியை பரப்பி விட்டார். இயக்குனர் திட்டமிட்டபடியே மீடியாக்கள் நடிகைக்கு கரண்ட் ஷாக் அடித்த செய்தியோடு அவர் படத்தில் இவர் நடிக்கும் செய்தியையும் வெளியிட்டது. எப்படி என் பவர் பாலிட்டிக்ஸ் என்று இயக்குனர் புன்சிரிப்போடு தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

saratha - muscat  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2013 - 08:48 Report Abuse
saratha அஞ்சலிய பிளந்துட்டாங்க
Rate this:
an - mdu  ( Posted via: Dinamalar Android App )
11 மார், 2013 - 22:01 Report Abuse
an அஞ்சலி நீ நஞ்ச எலியாட்டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in