Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்!

09 மார், 2013 - 15:56 IST
எழுத்தின் அளவு:

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது. அதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார்.

அமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார். இதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர். ஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி? இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே? என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம். இதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிட் ஆப் செய்து விட்டாராம். அதோடு, தனது ஆஸ்தான டைரக்டரான விஜய்யிடமும் இப்போது முகம் கொடுத்தே பேசாமல் விலகிய நிற்கிறாராம் அமலாபால்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Thala sathish - Madurai  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2013 - 10:00 Report Abuse
Thala sathish அமலாபால் நீ ஏன் கவலைபடுற; அதுதான் "தலய" நம்பனும். "தலய "மட்டும்தான் நம்பணும்
Rate this:
Maheswaran Arthy - trichy  ( Posted via: Dinamalar Windows App )
10 மார், 2013 - 08:34 Report Abuse
Maheswaran Arthy Great news . vijay next????????? choose another bollywoold actreas.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in