சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
தளபதி நடிகரின் மூன்றெழுத்து படத்தில் தனது ஆஸ்தான இயக்குனரின் அணுகிரகத்தால் ஐக்கியமாகி விட்டார் பால் நடிகை. ஆனால் இதே படத்தில் இன்னொரு பாலிவுட் நடிகையும் இறக்குமதியாகிற செய்தியை சமீபத்தில் வெளியிட்டனர். அதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார் பால். ஆனால் இப்போது பாலிவுட் நடிகை இடத்தை தான் பிடித்து விட வேண்டும் என்று லட்சுமிகரமான அந்த ராய் நடிகை கடும் முயற்சி செய்து வருகிறார். மேற்படி பட இயக்குனரை இது சம்பந்தமாக அடிக்கடி சந்தித்து பேசும் அம்மணி, எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள், பாலிவுட் என்ன ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில் பர்பாம் பண்ணி அசத்துகிறேன் என்று மல்லுக்கு நிக்கிறாராம்.
ஆனால், தளபதி நடிகரிடம் பாலிவுட் நடிகைதான் என்று உரக்க சொல்லி விட்டதால், திடீரென்று ராய் நடிகையை களத்தில் இறக்கி விட்டால், அவர் அதிருப்தியடைந்து விடுவாரோ என்று குழம்பிப்போயிருக்கிறார் இயக்குனர். இந்த சூழ்நிலையில், ராய் நடிகை இந்த படத்தில் இறங்கி விட்டால், அவரது கவர்ச்சிக்கு முன்னால் நாம் காலியாகி விடுவோம் என்று ஆடிப்போயிருக்கும் பால் நடிகை, ஆஸ்தான பார்ட்டியை மூளைச்சலவை செய்து வருகிறாராம். ஆனால் இந்த சேதியையறிந்த ராய் நடிகை, பால் நடிகை தனக்கு தடைக்கல் போடும் விவரத்தை அறிந்து, எதற்கு வம்பு, நேராக தளபதியையே சந்தித்து விடுவோமே என்று புது திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம்.