நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா? | "கரு - தியா" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா? | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் |
தில்லாலங்கடி படத்தில் நடித்தபோது தமன்னாவுடன் அதிக நெருக்கமாக பழகி வந்தார் ஜெயம் நடிகர். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் ஒரு சிறிய கேப் கிடைத்தாலும் தனிமையில் அமர்ந்து ஆசைதீர உரையாடி மகிழ்ந்த இந்த ஜோடி அதன்பிறகு ஸ்டார் ஹோட்டல் வரை நட்பை பகிர்ந்து கொண்டு வந்தது. இதனால் அந்த சமயத்தில் காதும் காதும் வைத்த மாதிரி இவர்களைப்பற்றிய கிசுகிசுக்கள்கூட கோலிவுட்டில் பற்றிக்கொண்டு எரிந்தது. அதனால் உஷாரான நடிகர்தரப்பு, உடனடியாக ஜெயம் நடிகருக்கு கடிவாளம் போட்டு நட்பை துண்டித்து விட்டது.
அதனால் பின்னர் தன்னுடன் நடித்த நடிகைகளுடன் ஓவராக டச் வைக்காமல் இருந்த ஜெயம் நடிகர், இப்போது ஆதிபகவனில் நடித்துள்ள கன்னித்தீவு பெண்ணான நீது சந்திராவுடன் ஓவர் கனெக்சன் ஆகியிருக்கிறாராம். படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றதால், அங்கிருந்த பரபரப்பான சூழ்நிலையில் இவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லையாம். அதனால் இருவரும் தன்னை மறந்து ஊர் சுற்றியிருக்கிறார்கள். அப்படி பற்றிக்கொண்ட நட்பு இப்போது இன்னும் ஆழமாகியிருக்கிறதாம். இதனால் அடிக்கடி நீதுவுக்கு போனில் கடலை போட்டு ஆசையை அடக்கி ஆளும் நடிகர், அடுத்தடுத்து தான் நடிக்கிற படங்களில் நீதுவுக்கு சிபாரிசு செய்து அவரை நிரந்தரமாக சென்னையில குடியேற்றி விட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு திரிகிறார் ஜெயம் நடிகர்.