Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

நடிகையிடம் இயக்குனர் காட்டும் கரிசனம்! அதிருப்தியில் தளபதி முணுமுணுப்பு

Cine gossipsதெய்வத்திருமகள் என்ற ஒரே படத்தில் அமலாபாலை தனது ஆஸ்தான நாயகியாக்கி விட்டார் அப்படத்தின் மூன்றெழுத்து இயக்குனர். அதே படத்தில் இன்னொரு நான்கெழுத்து நடிகையே முதன்மை வேடத்தில் நடித்தபோதும், அமலா நடிகைக்கே ஸ்பாட்டில் செம கவனிப்புகளாம். அவர் ஸ்பாட்டுக்கு வந்திறங்கி விட்டாலே, ஓடோடிவரும் மேற்படி இயக்குனர், பேக்அப் ஆவது வரை நடிகைக்கு பரிமாறப்படும் அனைத்து உணவுகளும் ஸ்டார் ஹோட்டல் அயிட்டங்களாகவே இருக்க வேண்டும் என்று தயாரிப்புத்துறைக்கு அதிரடி ஆர்டர் போட்டிருந்தாராம் இயக்குனர்.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் நடிகை விசயத்தில் இயக்குனர் விழுந்து விழுந்து கவனித்ததால், அப்படத்தில் நடித்த சீயான் நடிகர்கூட அப்போதைக்கு மூன்றெழுத்து இயக்குனர் மீது அதிருப்தியில்தான் இருந்தாராம். அதனால்தான், அதையடுத்து அவரது இயக்கத்தில் தான் நடித்த தாண்டவம் படத்தில் நடித்தபோது, அந்த மலையாளத்து நடிகை இந்த படத்தில் இருந்தால் சரிப்படாது என்று ஆரம்பத்திலேயே இயக்குனரின் ஆசைக்கு தடை போட்டு விட்டாராம் சீயான் நடிகர். அதனால்தான் அந்த படத்திலிருந்து ஆஸ்தான அம்மணியை ஓரங்கட்டியிருக்கிறார் அந்த இயக்குனர். இருப்பினும் இப்போது தளபதி நடிகரை வைத்து இயக்கும் படப்பிடிப்பு தளத்திலகூட அதே நிலைதானாம். எப்போது பார்த்தாலும் அம்மணியை உருகி உருகி கவனிக்கிறாராம் இயக்குனர். அதைப்பார்த்து இவர் என்ன படம் எடுக்க வந்தாரா? இல்லை நடிகைக்கு சேவை செய்ய வந்தாரா? என்று மேற்படி படத்தில் நடிக்கும் தளபதி நடிகர்கூட சில சமயங்களில் கடுப்பில் முணுமுணுக்கிறாராம்.

Tags »
Cine gossips, சினிவதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Vaal Payyan - Chennai,இந்தியா
2013-02-20 16:11:45 Report Abuse
Vaal Payyan விடுங்க பாஸு .. நீங்க திரையில டூயட் பாடுறீங்க ... அவரு நிஜத்துல பாட ஆச படறாரு
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
ராஜா - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
2013-02-07 12:50:51 Report Abuse
 ராஜா உனக்கு .....................எங்க எரியுது ........................?
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Mathan - Salem,இந்தியா
2013-02-07 11:23:23 Report Abuse
 Mathan Thalava u r great
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in