ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சண்டக்கோழி நடிகரும் மூணு ஷாவும் ஜோடியாக நடித்த படத்தில், செகண்ட் ஹீரோயினாக நடித்தார் காதலில் விழுந்த நடிகை. ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சியையெல்லாம் வெட்டி வீசிவிட்டார்களாம். ஒரு பாடல் காட்சி, ஒரு காதல் பிரிவு காட்சி, அப்புறம் வெளிநாட்டு சந்திப்பு காட்சி இதோடு அவரது போர்ஷனை முடித்து விட்டார்களாம். அவர் நடித்த வெளிநாட்டு காட்சிகள் படத்தில் இல்லையாம். அதோடு படத்தின் புரமோஷனுக்கோ, சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டுக்கோ அவரை அழைக்கவில்லையாம். பெரிய படம் என்பதால் சம்பளம் பற்றி பெரிதாக நினைக்காத நடிகை இப்போது அவர்கள் காட்சியை குறைத்து ஏமாற்றிவிட்டதால் சம்பள பாக்கியை கேட்டு நடிகர் சங்கத்தின் கதவை தட்ட முடிவு செய்திருக்கிறாராம்.